E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2929/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 2929/ ’12

      கௌரவ புத்திக பதிரண,— சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    2012 ஆம் ஆண்டில் கரும்பு ஆராய்ச்சி நிறுவகத்தின் ஊழல், மோசடிகளை ஆராய்வதற்காக அமைச்சின் செயலாளரால் மூன்று பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டதென்பதை அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி மூன்று பேர் அடங்கிய குழுவின் விதப்புரைகள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி விதப்புரைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iii) மேலே குறிப்பிடப்பட்ட மூன்று பேர் அடங்கிய குழுவிற்காக ஏற்கப்பட்ட செலவு எவ்வளவென்பதையும்;

      (iv) மேற்படி கொடுப்பனவுக்கு கரும்பு ஆராய்ச்சி நிறுவகத்தின் நிர்வாக சபை அங்கீகாரம் வழங்கியுள்ளதா என்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-08

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-08-08

பதில் அளித்தார்

கௌரவ லக்ஷமன் செனவிரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks