பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2957/12
கௌரவ அகில விராஜ் காரியவஸம்,— தபால் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 1982 ஆம் ஆண்டில் இருந்தே வெளிநாடுகளுடன் தொடர்பாடல்களை மேற்கொள்ளக் கூடியவாறான முன்னேற்றகரமான தொடர்பாடல் முறைமையொன்றைக் கொண்டிருந்த புலத்சிங்கள பிரதான தபால் அலுவலகம் தற்போது மிகவும் சீர்குலைந்துள்ளதென்பதையும்;
(ii) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலிருந்து இற்றை வரை மேற்படி அலுவலகத்தில் எவ்விதமான மறுசீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்;
(iii) தற்போது அங்கே 11 உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி பிரதான தபால் அலுவலகத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற உப தபால் அலுவலகங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி பிரதான தபால் அலுவலகத்திலும் மேலே குறிப்பிடப்பட்ட உப தபால் அலுவலகங்களிலும் கடமையாற்றுகின்ற மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) பிரதான தபால் அலுவகத்திலிருந்து மாத்திரம் சேவையைப் பெறுகின்ற சேவைபெறுனர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) புலத்சிங்கள பிரதான தபால் அலுவலகத்தை மறுசீரமைப்பதற்கும்;
(ii) அதில் நிலவுகின்ற குறைபாடுகளைப் பற்றி ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கும்
நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-26
கேட்டவர்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
அமைச்சு
தபால் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2012-11-26
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ ஜீவன் குமாரணதுங்க, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks