பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2979/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

    1. 2979/ ’12

      கெளரவ அகில விராஜ் காரியவசம்,— பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள்   அமைச்சரைக்  கேட்பதற்கு,—

      (அ)    (i)     உயர் தேசிய பொறியியல் டிப்ளோமா பாடநெறியை கற்ற சுமார் 2000 பேருக்கு அரச சேவையில் நிரந்தர நியமனங்களை வழங்காதிருப்பதற்கும்;

      (ii) கீழைத்தேய மொழிகள் தொடர்பான பரீட்சையில் சித்தியடைந்த டிப்ளோமாதாரிகளுக்கு நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் பதவிகளை வழங்காதிருப்பதற்கும்

      அரசாங்கம் தீர்மானித்துள்ளதென்பதை அவர் அறிவாரா?

      (ஆ) (i) தற்போது உயர் தேசிய பொறியியல் டிப்ளோமாவையும் கீழைத்தேய மொழிகள் தொடர்பான பரீட்சையையும் பூர்த்தி செய்து தொழில் எதிர்பார்ப்புடன் இருப்போரின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) உயர் தேசிய பொறியியல் டிப்ளோமாதாரிகளுக்கு அரச நிரந்தர நியமனஙகள் வழங்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      (iii) உயர் தேசிய பொறியியல் டிப்ளோமாதாரிகளுக்கு அரச நியமனங்களையும் கீழைத்தேய மொழிகள் தொடர்பான பரீட்சையில் சித்தியடைந்தோருக்கு நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் பதவிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

      அவர் இச்சபைக்கு குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-03-22

கேட்டவர்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-03-22

பதில் அளித்தார்

கௌரவ கெளரவ விஜய தஹநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks