E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3099/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பி. ஹரிசன், பா.உ.

    1. 3099/ ’12

      கௌரவ பி. ஹரிசன்,—  சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     2012 ஆம் ஆண்டளவில் வட மத்திய மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ள சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (ii) 2000 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் வடமத்திய மாகாணத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வருடாந்த அடிப்படையில் தனித்தனியே எவ்வளவு என்பதையும்;

      (iii) மேற்படி நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (iv) சிறுநீரக நோய் ஏற்படுவதற்கும், விவசாய இரசாயனப் பதார்த்தங்கள் மற்றும் இரசாயன உரப் பயன்பாட்டுக்கும் இடையே தொடர்புள்ளதா என்பதையும்;

      (v) சிறுநீரக நோய்க்கும் மேற்படி பிரதேச மக்கள் குடிப்பதற்குப் பயன்படுத்தும் நீருக்கும் இடையே தொடர்புள்ளதா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-03-08

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-03-08

பதில் அளித்தார்

கௌரவ மைத்ரீபால சிறிசேன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks