E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3109/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 3109/ ’12

      கெளரவ ரவி கருணாநாயக்க,—  வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)          வெளிநாட்டலுவல்கள் பாராளுமன்ற கண்காணிப்பு உறுப்பினர் குறித்த பதவிக்குரிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டு கண்காணிப்புப் பயணங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) அவர் நடைமுறை ரீதியாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரா அல்லது பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சரா என்பதையும்

      அவர் கூறுவாரா?

      (ஆ) மேலே (அ) (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள கண்காணிப்புப் பாராளுமன்ற உறுப்பினரின் பயணங்கள் குறித்து ஒவ்வொரு பயணம் தொடர்பாகவும்,

      (i) விமானப் பயணச் செலவினையும்;

      (ii) ஹோட்டல் தங்குமிடச் செலவுகளையும், சென்ற நாட்டின் உள்ளக பயணம் செய்தமைக்கான செலவுகளையும் களியாட்டச் செலவுகளையும்;

      (iii) கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரின் செலவினங்களுக்காக வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரத்தினால் செலுத்தப்பட்ட கொடுப்பனவுகளையும்;

      (iv) வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அடைந்து கொண்ட நன்மைகளையும்

      அவர் கூறுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-08

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-23

பதில் அளித்தார்

கௌரவ ஜீ.எல். பீரிஸ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks