E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3117/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 3117/ ’12

      கௌரவ ரவி கருணாநாயக்க,— காணி, காணி அபிவிருத்தி  அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    2010 சனவரி மாதத்திலிருந்து வவுனியா மாவட்டத்திலுள்ள சில காணிகள் அரசியல்வாதிகளாலும் அரசியல் ரீதியாகத் தொடர்புடைய அலுவலர்களாலும் பலவந்தமாக எடுக்கப்பட்டிப்பது பற்றி அவர் அறிவாரா?

      (ஆ)    (i)     2010ஆம் ஆண்டிலிருந்து வவுனியா மாவட்டத்தில் மாற்றப்பட்டிருக்கின்ற, குத்தகைக்கு விடப்பட்டிருக்கின்ற மற்றும் அனுமதிப் பத்திரம் அல்லது ‘சுவர்ணபூமி’ உறுதிகளின் பிரகாரம் பராதீனப்படுத்தப்பட்டிருக்கின்ற அரசாங்கக் காணிகளின் பெயர்கள், ஏக்கர் அளவுகள், பெறுமதிகள் ஆகியன காணி வாரியாக யாவையென்பதையும்;

      (ii) மேற்சொன்ன காணிகளை மாற்றிக்கொடுத்தல் அல்லது ஒப்படைத்தல் மற்றும் அதில் கேள்விப்பத்திர நடைமுறைகளைப் பின்பற்றாமை ஆகியவற்றுக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      (iii) மேற்படி (அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் தசாப்த காலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கும் ஏனையோருக்கும் மேற்படி காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்புகள் அல்லது வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றனவா என்பதையும்

      அவர் கூறுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-10-25

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

காணி, காணி அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-01-22

பதில் அளித்தார்

கௌரவ சிறிபால கமலத், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks