பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3137/ ’12
கௌரவ அஜித் பி.பெரேரா,— புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2005 முதல் 2012.06.01 வரையிலான காலகட்டத்தில் அரசியலமைப்பின் 34 ஆம் உறுப்புரையின் பிரகாரம் சனாதிபதியினால் வழங்கப்படுகின்ற மன்னிப்பின் கீழ் விடுதலை பெற்றுள்ள மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த,
(i) சிறைக் கைதிகளின் பெயர்கள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு கைதியும் “மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட சிறைக் கைதியாக” சிறைச்சாலையில் கழித்துள்ள காலம் எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு சிறைக் கைதியும் விடுதலை செய்யப்பட்ட திகதி யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) அரசியலமைப்பின் 34ஆம் உறுப்புரையின் பிரகாரம் தற்போதைய சனாதிபதியினால் வழங்கப்பட்ட மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டவர்களில் இருந்த,
(i) கொலைக் குற்றவாளிகளாக இருந்தவர்கள் யாவர் என்பதையும்;
(ii) ஹெரொயின் வியாபாரம் சம்பந்தமாகவோ அல்லது தம்வசம் வைத்திருத்தல் சம்பந்தமாகவோ குற்றவாளிகளாக இருந்தவர்கள் யாவர் என்பதையும்;
(iii) மேற்படி இரு வகைகளையும் சேராதவர்கள் இருப்பின் அத்தகைய சிறைக் கைதிகளின் பெயர்கள் மற்றும் அவர்கள் புரிந்துள்ள குற்றங்கள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-04-24
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-04-24
பதில் அளித்தார்
கௌரவ சந்திரசிறி கஜதீர, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks