E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3164/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பாலித குமார தெவரப்பெரும, பா.உ.

    1. 3164/ ’12

       கெளரவ பாலித தெவரப்பெரும,— உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     மத்துகம புனித மேரி வீதி என முன்பு அழைக்கப்பட்ட தற்போதைய குமார வெல்கம மாவத்தையில் 1991ஆம் ஆண்டு தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டு பின்னர் 2005.03.30ஆம் திகதி பிரதேச சபை அங்கீகாரத்தின் படி நிரந்தரமாக நிர்மாணிக்கப்பட்டு மின்சாரத்தையும் பெற்றிருந்த 70 கடைகள் திடீரென உடைத்து அகற்றப்பட்டு்ள்ளன என்பதையும்;

      (ii) இதன் காரணமாக  70 குடும்பங்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள் தற்போது நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்;

      (iii) புதிய கடைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக பிரதேச சபையானது ஒவ்வொரு கடை உரிமையாளர்களிடமிருந்து  ரூபா 100,000.00  முற்பணத் தொகையைப் பெற்றுள்ளதென்பதையும்;

      (iv) புதிய கடைகளை நிர்மாணிப்பதற்காக பிரதேச சபைக்குச் சொந்தமான காணியொன்றில் மண் பரிசோதனை நடைபெற்றுள்ள போதிலும் இதுவரை இவை நிர்மாணிக்கப்பட்டு வியாபாரிகளுக்கு வழங்கப்படாதமையினால் அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி கடைகளை உடைத்து அகற்றுவதற்கு ஆலோசனை வழங்கியோர் யாவர் என்பதையும்;

      (ii) புதிய கடைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக அறவிடப்பட்ட முற்பணத் தொகை சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      (iii) புதிய கடைகள் நிர்மாணிக்கப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்;

      (iv) கடைகளை இழந்த வியாபாரிகளுக்கு புதிய கடைகள் வழங்கப்படும் திகதி யாதென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-03-07

கேட்டவர்

கௌரவ பாலித குமார தெவரப்பெரும, பா.உ.

அமைச்சு

உள்ளூராட்சி, மாகாண சபைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-08

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks