பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3347/ ’12
கெளரவ பி. ஹரிசன்,— மின்வலு, எரிசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மின்வலு, எரிசக்தி அமைச்சுக்குச் சொந்தமான நிறுவனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) இந்த ஒவ்வொரு நிறுவனத்திலுமுள்ள அரச வாகனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) இந்நிறுவனங்களில் அரச வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் தரங்கள் யாவையென்பதையும்;
(iv) இவ்வுத்தியோகத்தர்களின் கண்காணிப்பின் கீழ் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) இவ்வாகனங்களுக்கு கொடுப்பனவுகள் செய்யப்படும் முறை யாதென்பதையும்;
(iii) இவ்வாகனங்களுக்கு வருடாந்தம் செலுத்தப்படும் மொத்தப் பணத்தொகை யாதென்பதையும்;
(iv) வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வாகனங்களை உபயோகிக்கும் உத்தியோகத்தர்கள் யாவர் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மேற்படி அமைச்சின் கீழுள்ள அரச வாகனங்கள், வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வாகனங்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட வாகனங்களை வேறுபடுத்தி இனங்காணும் முறையொன்று உள்ளதா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், அது பற்றித் தெளிவுபடுத்துவாரா என்பதையும்;
(iii) அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் அரச வாகனங்களில் அரச இலச்சினையுடன் உரிய நிறுவனத்தின் பெயர் குறிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-08-07
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
மின்வலு, எரிசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-02-18
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks