பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3354/ ’12
கௌரவ பி. ஹரிசன்,— காணி, காணி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காணி, காணி அபிவிருத்தி அமைச்சுக்குச் சொந்தமான நிறுவனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு நிறுவனத்தின் கீழ் உள்ள அரசாங்க வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி நிறுவனங்களில் அரசாங்க வாகனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் தரங்கள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி உத்தியோகத்தர்களின் மேற்பார்வையின் கீழ் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் உள்ள வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி வாகனங்களுக்கான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும் முறை யாதென்பதையும்;
(iii) மேற்படி வாகனங்களுக்காக வருடாந்தம் செலுத்தப்படும் மொத்தப் பணத் தொகை எவ்வளவென்பதையும்;
(iv) வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்களை பயன்படுத்தும் உத்தியோகத்தர்கள் யாவரென்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) (i) மேற்படி அமைச்சின் கீழ் உள்ள அரசாங்க வாகனங்கள், வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் சொந்த வாகனங்களை வேறுபடுத்தி இனம் காண்பதற்கான முறையியலொன்று உள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனின், இது தொடர்பில் விளக்கமளிப்பாரா என்பதையும்;
(iii) அமைச்சுக்கும் அதன் கீழுள்ள நிறுவனங்களுக்கும் சொந்தமான அரசாங்க வாகனங்களில் அரச இலச்சினையுடன் குறித்த நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-09-06
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
காணி, காணி அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-10-22
பதில் அளித்தார்
கௌரவ ஜனக பண்டார தென்னகோன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks