பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3364/ ’12
கௌரவ பி. ஹரிசன்,— அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வரையறுக்கப்பட்ட லங்கா பொஸ்பேற் கம்பெனியினால் 2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட எப்பாவல றொக் பொஸ்பேற் உரத்தின் அளவு ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவு;
(ii) உரம் உற்பத்தி செய்வதற்காக பொஸ்பேற் கம்பெனி வசமுள்ள உற்பத்தி இயந்திரங்களின் எண்ணிக்கை யாது;
(iii) பொஸ்பேற்றுக்கான வருடாந்த உள்நாட்டுத் தேவை எத்தனை மெட்றிக் தொன்;
(iv) பொஸ்பேற் கம்பெனியின் வருடாந்த உற்பத்தியில் மிகைநிலை நிலவுகின்றதா;
(v) ஆமெனில், அந்த மிகைநிலை எத்தனை மெட்றிக் தொன்;
(vi) உள்நாட்டுத் தேவைகளை நிறைவேற்றப் போதுமான உற்பத்தி ஆற்றல் நிலவுகின்றபோது, மேற்படி கம்பெனிக்கு புதிதாக உரம் தயாரிக்கும் இயந்திரமொன்றைக் கொள்வனவு செய்யவேண்டிய தேவை ஏற்பட்டமைக்கான காரணம் யாது;
(vii) மேற்படி புதிய இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்ட வேளையில் கேள்விப்பத்திர நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) மேலே குறிப்பிட்ட இயந்திரத்திற்கான,
(i) அனுப்பாணை மேற்கொள்ளப்பட்ட வழிமுறை யாது;
(ii) கொள்வனவு செய்ய செலவிட்ட பணத்தொகை யாது;
(iii) அனுப்பாண மேற்கொள்வதற்காக உத்தியோகத்தர்கள் சீனாவுக்கு செல்கின்றபோதுகூட மேற்படி இயந்திரம் இலங்கைத் துறைமுகத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்ததென்பதை அறிவாரா;
(iv) தற்போது மேற்படி இயந்திரம் மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்ற உரம் மெட்றிக் தொன் அளவு யாது;
(v) மேற்படி இயந்திரம் பொருத்தப்பட்ட கட்டடத்தை நிர்மாணிக்க செலவிடப்பட்ட பணத்தொகை யாது
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-12-04
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-12-04
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks