பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3373/ ’12
கௌரவ பி. ஹரிசன்,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வட மத்திய மாகாண சபை அநுராதபுரம் புதிய நகரத்தில் பஸ் தரிப்பு நிலையமொன்றை நிர்மாணிக்கின்றதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதன் நிர்மாணிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
(iii) மேற்படி நிர்மாணிப்பு ஒப்பந்தத்தை வழங்கும் போது திறந்த கேள்விப் பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டதா என்பதையும்;
(iv) இதற்காக கேள்விப் பத்திரம் சமர்ப்பித்த கம்பனிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(v) அக்கம்பனிகளின் பெயர்கள் யாவையென்பதையும்;
(vi) மேற்படி ஒப்பந்தத்தை வழங்குகின்றபோது கம்பனிகளின் இயலுமை பற்றி ஆராயப்பட்டதா என்பதையும்;
(vii) மேற்படி ஒப்பந்தத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) 2012.11.30 ஆம் திகதியளவில் மேற்படி பஸ் தரிப்பு நிலையத்தின் நிர்மாணிப்புப் பணிகள் எந்தளவுக்கு முடிவடைந்திருந்ததென்பதையும்;
(ii) அதற்காக ஒப்பந்தக் கம்பனிக்கு செலுத்தப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி பஸ் தரிப்பு நிலையத்தை நிர்மாணித்து திருப்பி ஒப்படைக்க வேண்டிய திகதி அக்கப்பனிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) ஒப்பந்த காலத்தின் படி வேலை முடிக்கப்படவில்லையெனில் கால தாமதத்துக்காக பணம் அறவிடப்படுமா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) நிர்மாணிப்பு ஒப்பந்தகாரரின் தாமதம் காரணமாக மக்களுக்கு நேரிடுகின்ற சிரமங்களைப் பற்றி அறிவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அது சம்பந்தமாக தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(iii) பஸ் தரிப்பு நிலையத்தின் நிர்மாணிப்புப் பணிகளை பூர்த்தி செய்யும் திகதி யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-11-28
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
உள்ளூராட்சி, மாகாண சபைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-09-03
பதில் அளித்தார்
கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks