பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3384/ ’12
கெளரவ பி. ஹரிசன்,— வன சீவராசிகள், வளப்பேணுகை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 1950 ஆம் ஆண்டின் பின்னர் இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட யானைகள் தொகை மதிப்பீடுகளின் எண்ணிக்கை, அவை நடாத்தப்பட்ட வருடங்கள் மற்றும் ஒவ்வொரு மதிப்பீட்டினதும் தகவல்கள் யாவை என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) 2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட யானைகள் தொகை மதிப்பீட்டுக்குச் செலவு செலவு செய்யப்பட்ட பணத்தொகை எவ்வளவு;
(ii) அதன் அறிக்கையைச் சமர்ப்பிப்பாரா;
(iii) இன்றேல், அதற்கான காரணம் யாது;
(iv) இவ்வறிக்கையின் படி அதிகரித்துள்ள யானைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அவற்றைப் பராமரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கு காட்டு யானைகளையும் வன விலங்குகளையும் கண்டுகளிப்பதற்கான இடங்கள் அமைக்கப்பட்டுள்ளனவா;
(ii) அவ்விடங்கள் யாவை;
(iii) ஓர் உல்லாசப் பிரயாணியிடமிருந்து இவ்விடங்களில் அறவிடப்படும் பணத்தொகை எவ்வளவு;
(iv) கடந்த ஐந்து வருடங்களில் இவ்வாறான இடங்களிலிருந்து ஈட்டப்பட்டு அரசுக்கு வழங்கப்பட்ட வருமானம் வருடாந்தம் வெவ்வேறாக எவ்வளவு
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) (i) வன சீவராசிகள் பேணல் திணைக்களத்தால் வன சீவராசிகள் பேணல் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் பங்களிப்பு தொடர்பாக ஒரு அறிக்கையை சமர்ப்பிப்பாரா;
(ii) வன நிலப்பரப்பு குறைந்துள்ளதனால் தமது இருப்பு தொடர்பில் ஆபத்துக்குள்ளாகியுள்ள வன விலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை
என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-01-24
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
வனசீவராசிகள் வளப் பேணுகை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-05-08
பதில் அளித்தார்
கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks