பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3431/ ’13
கெளரவ பி. ஹரிசன்,— சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் இற்றைவரை இனங்காணப்பட்டுள்ள தாவர இனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி தாவர இனங்களில் இலங்கைக்கே உரியதான தாவர இனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) இவற்றில் தற்போது அழிவடைந்துள்ள தாவர இனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iv) அழிவடைந்துள்ள மேற்படி தாவர இனங்களின் பெயர் பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(v) இலங்கையில் தாவர இனங்கள் அழிவடைவதற்கும் அழிவடையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதற்கும் ஏதுவாகின்ற காரணிகள் யாவை என்பதையும்;
(vi) அழிவடையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள தாவரங்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இலங்கையில் மரநடுகை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளின் எண்ணிக்கை வருடாந்த ரீதியில் தனித்தனியே எவ்வளவென்பதையும்;
(ii) இவ்வாறு நடப்பட்டுள்ள மரக்கன்று வகைகள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி மரக்கன்றுகளை பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iv) அழிவடைந்துள்ளதும் அழிவடையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதுமான மரக்கன்று வகைகள் மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடப்பட்டுள்ளதா என்பதையும்
(v) மேற்படி மர நடுகை நிகழ்ச்சித்திட்டத்திற்காக கடந்த 05 வருட காலத்தினுள் வருடாந்தம் செலவிடப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவென்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-02-06
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-02-18
பதில் அளித்தார்
கௌரவ ஏ.ஆர்.எம். அப்துல் காதர், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks