பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3449/ ’13
கௌரவ பி. ஹரிசன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அதிபர்களையும் இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களையும் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் கல்விச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு உரித்தானதா;
(ii) வடமத்திய மாகாணசபையின் அமைச்சரவையினால் அத் தத்துவங்களை மீறி மாகாண கல்விச் சேவைக்கான உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பதற்கான தத்துவம் மேற்படி மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ளதா;
(iii) இன்றேல், வடமத்திய மாகாண கல்வி அலுவலகங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர் சேவையின் உத்தியோகத்தர்கள் பாடப் பணிப்பாளர் பதவிகளுக்காக ஆட்சேர்க்கப்பட்டுள்ள நடைமுறை யாது;
(iv) மாகாண சபையினால் மத்திய அரசாங்கத்தின் அங்கீகாரமின்றி ஆட்சேர்க்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு பிரயாணச் செலவுகளும் மேலதிகப் படிகளும் செலுத்தப்படுகின்ற விதம் யாது;
(v) மேற்படி கொடுப்பனவுகள் வடமத்திய மாகாணத்தின் எச் செலவுத் தலைப்பின் கீழ் செலுத்தப்படுகின்றன;
(vi) அவ்வுத்தியோகத்தர்களுக்கு பணம் செலுத்துதல் மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சின் அங்கீகாரத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றதா;
(vii) மேற்படி பணம் செலுத்தப்படுகையில் அரசாங்கப் பணம் முறைசாரா வகையில் கையாளப்பட்டிருப்பின் அவ்வாறு செய்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-05-20
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-07-09
பதில் அளித்தார்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks