E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3528/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 3528/ ’13

      கௌரவ புத்திக பதிரண,— தேசிய மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      காலிக் கோட்டை பழைய தபால் அலுவலக கட்டடம் தொல்பொருளியல் முக்கியத்துவமிக்க இடமொன்றாகும் என்பதையும்;

                 (ii)     தற்போது மேற்படி கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதென்பதையும்;

                 (iii)    மேற்படி கட்டடம் அமைந்துள்ள நிலத்தில் அத்துமீறி குடியேறியுள்ள  நபர்கள் இருப்பதாக மக்கள்  குற்றம்சாட்டுகின்றனர் என்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) காலி கோட்டை பழைய  தபால் அலுவலக கட்டடத்தையும் அதன் வளங்களையும் பயன்படுத்தாமல் கைவிடப்பட்டிருப்பது பேரழிவொன்றாகுமென்பதையும், மேற்படி அலுவலக கட்டடத்தை  புனரமைத்ததன் பின்னர் அரசாங்கத்துக்கு வருமானம் ஈட்டிக்  கொள்ள முடியுமென்பதையும் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி கட்டடத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (iii) அதற்கான நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) ஆமெனில், ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவென்பதையும்;

      (v) திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்;

      (vi) மேற்படி  கட்டடம் அமைந்துள்ள காணியில் அத்துமீறி குடியிருப்பவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-12-07

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

தேசிய மரபுரிமைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-12-07

பதில் அளித்தார்

கௌரவ கெளரவ ஜகத் பாலசூரிய, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks