E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3600/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ.

    1. 3600/ ’13

      கெளரவ ரஞ்சன் ராமநாயக்க,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ)    (i)     வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கை ஊழியர்களின் நலனோம்புகை நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்ப்பதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் இலங்கைத் தூதரகங்களுக்கு நலன்புரி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும்;

      (ii) வெளிநாடுகளில் பல்தரப்பட்ட  துன்புறுத்தல்களுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாகின்ற இலங்கை ஊழியர்களுக்கு இவர்களில் பெரும்பாலான உத்தியோகத்தர்களிடமிருந்து ஒழுங்கான சேவை கிடைப்பதில்லை என்பதையும்

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) மேற்படி நலன்புரி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படும் போது கவனத்திற் கொள்ளப்பட்ட தகைமைகள் யாவையென்பதையும்;

      (ii) நியமிக்கப்பட்டுள்ள மேற்படி உத்தியோகத்தர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்;

      (iii) மேற்படி பதவிக்கு சர்வதேச சட்ட திட்டங்கள் தொடர்பாகவும், சம்பந்தப்பட்ட நாட்டின் மொழி மற்றும் கலாசாரம் தொடர்பாகவும் அறிவினையும் தகைமைகளையும் கொண்ட உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-06

கேட்டவர்

கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-08

பதில் அளித்தார்

கௌரவ டிலான் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks