பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3634/ ’13
கெளரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ)மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுக எண்ணெய்த் தாங்கி பண்ணை நிர்மாணம் தொடர்பாக,
(i) கருத்திட்டத்தின் இறுதியாக மதிப்பீடு செய்யப்பட்ட மொத்தச் செலவினம்;
(ii) கருத்திட்டச் செலவினம் எவ்வாறு நிதியிடப்பட்டது;
(iii) கடன் வசதிகளுக்கான நியதிகள், ஏதும் இருப்பின்;
(iv) நிதிக் கிரயம் மற்றும் கடன் வட்டி ஆகியவற்றின் கொடுப்பனவு இடம்பெற்றதன் பின்னர் கருத்திட்டம் எப்போது காசோட்ட இலாப நட்டமற்ற நிலையை அடையும்;
(v) ஒவ்வொரு தாங்கியினதும் கொள்ளளவு;
(vi) தாங்கிகள் ஒவ்வொன்றும் பூர்த்தி செய்யப்பட்ட திகதிகள் அல்லது அவற்றைப் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் திகதிகள்
ஆகியவற்றை அவர் கூறுவாரா?
(ஆ) (i) எதிர்பார்க்கப்படும் காப்பறை எரிபொருள் (bunker fuel) விமான எரிபொருள் (aero fuel) மற்றும் எல். பி. ஜி. (LPG) ஆகிவற்றை ஏற்றிவரும் எண்ணெய்க் கப்பல்களை விடுவிக்க தேவைப்படும் தாங்கிகளின் எண்ணிக்கை;
(ii) இற்றை வரையில் துறைமுகத்திற்கு வந்துள்ள மேலே குறிப்பிடப்பட்ட எரிபொருள் வகைகளை விடுவித்துள்ள கப்பல்களின் எண்ணிக்கையையும்;
(iii) மூல கருத்திட்டத்திற்கிணங்க வருடமொன்றுக்கு துறைமுகத்திற்கு வருவதற்கு எதிர்பார்க்கப்படும் எண்ணெய்க் கப்பல்களின் எண்ணிக்கையையும் மாதமொன்றுக்கு மேற்படி எரிபொருள் வகைகளை விடுவிக்க தேவையான தாங்கிகளின் எண்ணிக்கையையும்
அவர் கூறுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-07-23
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ.
அமைச்சு
துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-09-03
பதில் அளித்தார்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks