பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3652/ ’13
கௌரவ புத்திக பதிரண,— வனசீவராசிகள் வளப் பேணுகை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஹபரனை மற்றும் உடவளவை பிரதேசங்களிலிருந்து பிடிக்கப்பட்ட சுமார் 22 குட்டி யானைகள் சட்ட விரோதமான முறையில் பல்வேறு வர்த்தகர்கள், ஆலயங்கள் மற்றும் விஹாரைகளின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) இதற்கு எதிராக வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் மேற்படி (அ)(i) இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமைக்கான காரணம் யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) “பழக்கப்பட்ட யானைகளின் சங்கம்” எனும் பெயரில் கம்பனியொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) இச்சங்கத்தின் உத்தியோகத்தர்கள் யானைகளை தங்களுடைய பொறுப்பில் வைத்துக்கொண்டு சமூகத்திற்கு தவறான முன்மாதிரிகளை வழங்குகின்றார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறாரா என்பதையும்;
(iii) பழக்கப்பட்ட யானைகள் சங்கத்தின் உத்தியோகத்தர்கள் தங்கள் பொறுப்பில் யானைகளை வைத்துக்கொள்வதை ஒரு மோசடி வியாபாரமாக செய்துவருவதால், இது பற்றி முறைசார்ந்த விசாரணையொன்றை நடாத்தி இந்நிலையை தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-06-20
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
வனசீவராசிகள் வளப் பேணுகை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-06-20
பதில் அளித்தார்
கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks