E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3656/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.

    1. 3656/ ’13

      கௌரவ வசந்த அலுவிஹாரே,— சமூக சேவைகள்  அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     மஹிந்த சிந்தனையின் 47 ஆம் பக்கத்தில் அங்கவீனரான வயோதிப  சமுர்த்தி பெறுநர் ஒருவரைக் கொண்டுள்ள குடும்பத்திற்கு ரூபா 3000/- மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளதென்பதையும்;

      (ii) மஹிந்த சிந்தனை தொலைநோக்கின் 193 ஆம் பக்கத்தின்படி இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும்;

      (iii) மேற்படி கூற்றுக்களின் பிரகாரம், உரித்தாகின்ற கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்காக அங்கவீன நிலையிலுள்ள சமுர்த்தி நிவாரணம் பெறுகின்றவரான குருநாகல், பமுனாகொட்டுவ, கடிஹாரயவில் வசிக்கும் டபிள்யு.எம்.பீ.ஏ. வீரசேகர 2012.05.14 ஆம் திகதி பலவீனர்களுக்கான தேசிய செயலகத்திற்கு விண்ணப்பமொன்றைச் சமர்ப்பித்துள்ளார் என்பதையும்;

      (iv) மேற்படி விண்ணப்பம் தற்போது காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) ரூபா 3000/- கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்கு 2012.05.21 ஆம் திகதியிலிருந்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள திரு. வீரசேகரவுக்கு மேற்படி கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-21

கேட்டவர்

கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.

அமைச்சு

சமூக சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-12-04

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks