பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3732/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ.

    1. 3732/ ’13

      கௌரவ ரஞ்சன் ராமநாயக்க,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் மேலதிக பொதுமுகாமையாளர் பதவியை வகிப்பவரின் பெயர் யாது;

                 (ii)    மேற்படி பதவியை வகிப்பவரினால் பெற்றுக் கொள்ளப்படும் மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் எவ்வளவு

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராண்மையில் பொது முகாமையாளர் பதவியை வகிப்பவரின் பெயர் யாது;

      (ii) மேற்படி பதவியை வகிப்பவரினால் பெறப்படும் மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் எவ்வளவு;

      (iii) மேற்படி பதவியை வகிப்பவருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சருக்கும் இடையே உறவு முறை காணப்படுகின்றதா;

      (iv) ஆமெனின், அந்த உறவு முறை யாது

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (இ) (i) ஒரே நபரால் மேலே குறிப்டப்பட்ட இரண்டு நிறுவனங்களிலும் பதவி வகிக்க முடியுமா;

      (ii) இதன்படி இரண்டு நிறுவனங்களிலும் பதவி வகித்தல் தவறாக இருப்பின், அதனை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-23

கேட்டவர்

கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-03-06

பதில் அளித்தார்

கௌரவ டிலான் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks