E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3772/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விஜித பேருகொட, பா.உ.

    1. 3772/ ’13

      கௌரவ விஜித பேருகொட,— நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நீர் வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டுக் கருத்திட்டத்தின் நோக்கம் யாதென்பதையும்;

      (ii) மேற்படி கருத்திட்டத்தின் வேலைகளை நிறைவுசெய்ய எதிர்பார்க்கும் காலப்பகுதி யாதென்பதையும்;

      (iii) மேற்படி கருத்திட்டத்தின் கீழ் நன்மையடையும் நுகர்வோரின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iv) மேற்படி கருத்திட்டத்திற்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள செலவினம் யாதென்பதையும்;

      (v) இன்றளவில் மேற்படி கருத்திட்டத்திற்கென செலவிட்டுள்ள பணத் தொகை யாதென்பதையும்;

      (vi) குறித்த செலவுகளை ஏற்கின்ற நிறுவனம் யாதென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-21

கேட்டவர்

கௌரவ விஜித பேருகொட, பா.உ.

அமைச்சு

நீர் வழங்கல், வடிகாலமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-23

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks