E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3773/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விஜித பேருகொட, பா.உ.

    1. 3773/ ’13

      கௌரவ விஜித பேருகொட,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     2005ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரையான காலப்பகுதியில் ‘கமத்தொழில் உற்பத்திகளுக்கான பெறுமதி சேர்த்தல் மற்றும் வழங்கல் செயற்பாடுகளின் போது அறுவடைக்குப் பிந்திய சேதங்களைக் குறைப்பதன் மூலம் கமத்தொழில் உற்பத்திகளுக்கான சந்தைப்படுத்தலை மேம்படுத்தல்’ எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம் யாதென்பதையும்;

      (ii) இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ள கடமைப் பொறுப்புகள் யாவை என்பதையும்;

      (iii) மக்களுக்கு இதன் மூலம் கிடைத்துள்ள நிவாரணங்கள் யாவை என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) கமத்தொழில் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்தின் பொருட்டு தேசிய பல்கலைக்கழகங்களிலிருந்து பெறப்பட்டுள்ள சேவைகளும் பங்களிப்புகளும் யாவை என்பதையும்;

      (ii) S.2KR 2010-2012 நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் கருதப்படுவது யாதென்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-25

கேட்டவர்

கௌரவ விஜித பேருகொட, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-09-03

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks