பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3870/ ’13
கௌரவ செஹான் சேமசிங்ஹ,— தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தெங்குப் பயிர்ச்செய்கை சபையின் கருத்திட்டமொன்றான ‘கப்ருக்க புரவர’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ள நாற்றுமேடைகளுக்கான விதைத் தேங்காய்களைப் பெற்றுக் கொள்வது எவ்வாறு என்பதையும்;
(ii) விதைத் தேங்காய்களைப் பெற்றுக் கொள்வதற்காக விசேட தென்னை மரங்கள் இனங்காணப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி மரங்களை இனங்காண்பதற்கு செயற்பட்டவர்கள் யாவர் என்பதையும்;
(iv) இதுவரை இனங்காணப்பட்டுள்ள விதைத் தேங்காய்களை பெற்றுக் கொள்ளும் மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(v) ‘கப்ருக்க புரவர’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ள தெங்கு நாற்று மேடைகளில் இதுவரை நடப்பட்டுள்ள விதைத் தேங்காய்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(vi) மேற்படி ஒவ்வொரு விதைத் தேங்காய் நாற்றுமேடையும் அமைந்துள்ள இடங்கள் யாவை என்பதையும்;
(vii) மேற்படி நாற்றுமேடைகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்ற பயிர்ச் செய்கைக்கு தகுந்த நிலையில் காணப்படுகின்ற தென்னங் கன்றுகள் தொடர்பாக மேற்கொள்ளும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-07-24
கேட்டவர்
கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.
அமைச்சு
தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-09-04
பதில் அளித்தார்
கௌரவ ஜகத் புஷ்பகுமார, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks