E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3872/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.

    1. 3872/ ’13

      கௌரவ செஹான் சேமசிங்க,— கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    2005 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதிக்குள்,

                 (i)     புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள, நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற, நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மற்றும் மேம்படுத்தப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (ii) புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நங்கூரமிடும் இடங்கள், உவர்நீர் மற்றும் நன்னீர் மீன்பிடித் துறைகள், ஐஸ் உற்பத்திச்சாலைகள், குளிரூட்டல் அறைகள், படகு திருத்தும் இடங்கள் மற்றும் வலை உற்பத்தித் தொழில்சாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (iii) மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புதிதாக ஈடுபடுத்தப்பட்டுள்ள மீன்பிடிக் கலங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்

      தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் யாவை என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-07

கேட்டவர்

கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-08

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ சரத் குமார குணரத்ன, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks