E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4103/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

    1. 4103/ ’13

      கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,—  போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     2011 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதல் இற்றைவரை பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட S - 11 (S11) வகை புகையிரத வலுப்பொறித் தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி புகையிரத வலுப்பொறித் தொகுதிகளில் இன்றளவில் பாவனையில் உள்ளவற்றின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iii) மேற்படி புகையிரத வலுப்பொறித் தொகுதிகளுக்காக வழங்கப்பட்டுள்ள உத்தரவாதக் காலப்பகுதி யாதென்பதையும்;

      (iv) மேற்படி புகையிரத வலுப்பொறித் தொகுதிகளை இறக்குமதி செய்வதற்காக செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      (v) மேற்கூறப்பட்ட புகையிரத வலுப்பொறித் தொகுதிகளில் தற்போது பல்வேறு குறைபாடுகளின் காரணமாக பாவனையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ள எண்ணிக்கை எவ்வளவென்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-03-05

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-03-05

பதில் அளித்தார்

கௌரவ றோஹண திஸாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks