பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4149/ ’13
கௌரவ அனுர திசாநாயக்க,— சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கதிர்காமம் - தம்மன்னாவ இரத்தினக்கல் ஏல விற்பனைக் காணியில் CCTV நிழற்படக் கருவி முறைமையொன்று பொருத்தப்பட்டதா;
(ii) CCTV நிழற்படக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்த கால எல்லை யாது;
(iii) மேற்படி CCTV நிழற்படக் கருவிகள் கொள்வனவு செய்யப்பட்டனவா;
(iv) இன்றேல், மேற்படி நிழற்படக் கருவிகள் குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்டதா;
(v) குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்டிருப்பின், மேற்படி CCTV நிழற்படக் கருவிகளை வழங்கிய நிறுவனம் யாது;
(vi) மேற்படி நிழற்படக் கருவி முறைமையை கொள்வனவு செய்வதற்கு அல்லது குத்தகைக்குப் பெறும் பொருட்டு கடைப்பிடித்த நடைமுறை யாது;
(vii) CCTV நிழற்படக் கருவி முறைமையொன்று பொருத்தப்பட்டிருக்கையில் 2012.04.03 ஆந் திகதி அல்லது அதற்கு அண்மிய தினமொன்றில் தம்மன்னாவ காணியிலிருந்து படிம மண் இரகசியமாக ஏற்றிச்செல்லப்பட்டுள்ளதா;
(viii) அவ்வாறெனின், அந்த படிம மண் ஏற்றிச் செல்லப்பட்டமை CCTV நிழற்படக் கருவி முறைமையில் பதிவாகியுள்ளதா
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-03-05
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-03-05
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks