பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4158/ ’13
கௌரவ ஆர்.எம். ரஞ்ஜித் மத்தும பண்டார,— நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையினால் துண்டிக்கப்பட்டுள்ள நீர் விநியோக இணைப்புகளை மீண்டும் வழங்கும்போது குடிமனைசார் நீர் பாவனையாளர் ஒருவரிடமிருந்து ரூபா 500.00 மற்றும் வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து ரூபா 1500.00 வீதம் அறவிடப்பட்டது என்பதையும்;
(ii) துண்டிக்கப்பட்ட நீர் விநியோக இணைப்பு ஒன்றை மீண்டும் வழங்குவதற்கான கட்டணமானது தற்போது குடிமனைசார் நீர் பாவனையாளர் ஒருவரிடமிருந்து ரூபா 2300.00 மற்றும் வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து ரூபா 6900.00 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
(iii) துண்டிக்கப்பட்டுள்ள நீர் விநியோக இணைப்புகளை மீண்டும் வழங்குவதற்கான புதிய கட்டணங்கள், முன்னர் இருந்த கட்டணத்தைப் போன்று ஐந்து மடங்கினால் உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக அனைத்து நீர் பாவனையாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) துண்டிக்கப்பட்ட நீர் விநியோக இணைப்புகளை மீண்டும் வழங்குவதற்காக தற்போது அறவிடப்படும் கட்டணத் தொகையைத் திருத்தியமைத்து, ஒட்டுமொத்த நீர் பாவனையாளர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-02-07
கேட்டவர்
கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.
அமைச்சு
நீர் வழங்கல், வடிகாலமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-05-07
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks