பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4172/ ’13
கௌரவ அஜித் மான்னப்பெரும,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்போது கம்பஹா மாவட்டத்தில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு உரித்தான டிப்போக்கள் மற்றும் வேறு காணிகளில் 30 நாட்களுக்கும் அதிக காலம் சேவையில் ஈடுபடுத்தாது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்வண்டிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) மேற்படி பஸ்வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படாது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி பஸ்வண்டிகளை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்காக திருத்த வேண்டியிருப்பின், அதற்குத் தேவையான பணத்தொகை எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) சுனாமி அனர்த்தத்தின் பின்னர் உதவியாக இலங்கை போக்குவரத்துச் சபைக்குக் கிடைத்த பஸ்வண்டிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) தற்போது மேற்படி பஸ் வண்டிகளில் சேவையில் ஈடுபடுத்தக்கூடிய நிலையில் உள்ள பஸ்வண்டிகளின் எண்ணிக்கை யாது ன்பதையும்;
(iii) 2012 ஜனவரி முதல் இன்றுவரை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள பஸ்வண்டிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iv) அதற்காக செலவிடப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவு என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-12-17
கேட்டவர்
கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-12-17
பதில் அளித்தார்
கௌரவ குமார வெல்கம, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks