E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4173/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

    1. 4173/ ’13

      கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      இலங்கை மத்திய வங்கியானது, நிதி, திட்டமிடல் அமைச்சின் கீழ் வருகின்ற ஒரு நியதிச்சட்ட நிறுவனமா என்பதையும்;

      (ii) இன்றேல், இது அமைச்சின் பொறுப்பில் இல்லாத சுயாதீனமான ஒரு நிறுவனமா என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இலங்கை மத்திய வங்கியின்,

      (i) பிரதம கணக்கீட்டு அலுவலர் யார் என்பதையும்;

      (ii) நாணயச் சபையின் கடமைகள் யாவை என்பதையும்;

      (iii) முகாமைத்துவ மற்றும் நிருவாகத் தீர்மானங்களின் இறுதி அதிகாரி யார் என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) (i) இலங்கை மத்திய வங்கிக்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையொன்றும், சம்பளக் கட்டமைப்பொன்றும் உள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அதனை அங்கீகரித்துள்ள அதிகாரி யார் என்பதையும்;

      (iii) அதற்கு தேசிய சம்பளங்கள், ஆளணியினர் ஆணைக்குழு மற்றும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) (i) இலங்கை மத்திய வங்கியின் பணியாட்டொகுதியின் சம்பள மீள்திருத்த முறை மற்றும் அதற்காகப் பயன்படுத்துகின்ற தகவுதிறன்கள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி (இ) (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் சம்பளக் கட்டமைப்பை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-09-06

கேட்டவர்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

அமைச்சு

நிதி, திட்டமிடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-02-18

பதில் அளித்தார்

கௌரவ ஏ.ஆர்.எம். அப்துல் காதர், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks