பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4313/ ’13
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க,— வன சீவராசிகள் வளப் பேணுகை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) உடவளவை, யாலை, வில்பத்து, வஸ்கமுவ, கல்கமுவ மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்கள் தொடர்ந்தும் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு ஆளாகின்றார்கள் என்பதையும்;
(ii) காட்டு யானைகளினால் இடம்பெறுகின்ற தொந்தரவுகளிலிருந்து மேற்படி பிரதேச மக்களை பாதுகாப்பதற்கான தீர்வொன்றாக 2002 ஆம் ஆண்டு முதல் மின்சார வேலிகளை பராமரித்தல், காட்டு யானைகளை விரட்டுதல், வேட்டையாடுவோர் மற்றும் வேட்டை இறைச்சிகளை விற்பனை செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்துதல் ஆகிய நடவடிக்கைகளுக்காக வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் சேவையாற்றும் பொருட்டு ஆட்கள் அமய ஊழியர்களாக ஆட்சேர்க்கப்பட்டார்கள் என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேலே (அ) (ii) இற்கு அமைய ஆட்சேர்க்கப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(ii) 2013.01.01 ஆம் திகதி முதல் மேற்படி ஊழியர்களின் சேவை இடைநிறுத்தப் பட்டுள்ளதன் காரணமாக குறித்த பிரதேசங்களில் காட்டு யானைகளினால் இடம்பெறுகின்ற விபத்துக்கள் மீண்டும் அதிகரித்துள்ளதையும், தொழிலை இழந்துள்ள மேற்படி ஆட்கள் கடும் அசெளகரியங்களை எதிர்நோக்கி உள்ளதையும் ஏற்றுக் கொள்கின்றாரா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி ஊழியர்களுக்கு மீண்டும் சேவையைப் பெற்றுக் கொடுத்து நிரந்தர சேவையில் அமர்த்தி மேற்படி பிரதேசங்களில் காணப்படுகின்ற காட்டு யானைகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-03-20
கேட்டவர்
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.
அமைச்சு
வனசீவராசிகள் வளப் பேணுகை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-06-18
பதில் அளித்தார்
கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks