E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4341/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சுஜீவ சேனசிங்க, பா.உ.

    1. 4341/ ’13

      கெளரவ சுஜீவ சேனசிங்க,—  கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)     (i)      இலங்கை கமத்தொழில் ஆராய்ச்சிக் கொள்கைகளுக்கான சபையினால் இலங்கை வங்கியின் சுதந்திர சதுக்கத்திலுள்ள கிளையில், பேணிவரப்படுகின்ற 2323310 ஆம் இலக்க கணக்குக்கு மேலதிகமாக அதே வங்கியில் 2323246 ஆம் இலக்கத்தின் கீழும் கணக்கொன்று பேணிவரப்பட்டுள்ளதென்பதையும்;

      (ii) 2005.04.15 ஆம் திகதியன்று மேற்படி நிறுவனத்தின் 4530801719  ஆம் இலக்க சாதாரண வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்ட ரூபா 4,293,253.00 பணத் தொகையை 2005.05.03 ஆம் திகதியன்று 004530207663 ஆம் இலக்க வேறொரு கணக்குக்கு மாற்றுவதற்கு மேற்படி நிறுவனத்தின் நிதி முகாமையாளர் மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் கட்டளையிட்டுள்ளார் என்பதையும்;

      (iii) மேற்படி மேலதிக கணக்கு பற்றிய தகவல்கள் மேற்படி நிறுவனத்தின் வசம் இருக்கவில்லை என்பதால் மேற்படி பணத் தொகை எப்பணிக்காக பயன்படுத்தப்பட்டதென்பது கணக்காய்வின் போது வெளிப்படவில்லை என்பதையும்;

      (iv) மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள 2323246 ஆம் இலக்க கணக்கு தொடர்பாகவும் எந்தவொரு தகவலும் மேற்படி நிறுவனத்தின் வசம் இல்லையென்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) 2323310  ஆம் இலக்க கணக்குக்கு மேலதிகமாக  2323246 ஆம் இலக்கத்தின் கீழ் மேலுமொரு கணக்கை பேணிவருவதற்கான காரணம் யாதென்பதையும்;

      (ii) மேலே அ (i) மற்றும் அ (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு இலக்கங்கள் ஊடாக முறைகேடான நிதிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்ட ஊழல்பேர்வழிகளான உத்தியோகத்தர்கள் யாவர் என்பதையும்;

      (iii) இவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-04-22

கேட்டவர்

கௌரவ சுஜீவ சேனசிங்க, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-06-03

பதில் அளித்தார்

கௌரவ கெளரவ வை.ஜீ. பத்மசிரி, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks