E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4411/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

    1. 4411/ ’13

      கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபையின் மூலம் சுவீகரிக்கப்பட்ட இலங்கை எனர்ஜி தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய நீர் மின்சக்தி உற்பத்திக் கருத்திட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி கருத்திட்டங்களில் தற்போது நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள கருத்திட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iii) அக்கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;

      (iv) மேற்படி ஒவ்வொரு கருத்திட்டத்தினதும் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலம் தனித்தனியே எவ்வளவென்பதையும்;

      (v) இற்றைவரை வேலைகள் ஆரம்பிக்கப்படாதுள்ள கருத்திட்டங்களை அமுலாக்குவதற்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-04-23

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-06-04

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks