E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4438/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

    1. 4438/ ’13

      கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      மருத்துவ பட்டப் (MBBS) பாடநெறியை கற்பதற்காக மாலம்பேயில் அமைந்துள்ள SAITM தனியார் மருத்துவக் கல்லூரிக்கு முதல் தடவையாக மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட ஆண்டு யாது என்பதையும்;

      (ii) 2013 செப்தெம்பர் மாதம் 30 ஆம் திகதியளவில் மேற்படி பட்டப் பாடநெறியை கற்பதற்காக பதிவு செய்துள்ள உள்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (iii) 2013 ஆம் ஆண்டில் பதிவு செய்த மாணவர் ஒருவர் மேற்படி பாடநெறிக்காக செலுத்த வேண்டியுள்ள மொத்தப் பாடநெறிக் கட்டணம்  எவ்வளவு என்பதையும்;

      (iv) மேற்படி நிறுவனம் தாபிக்கப்படுகின்றபோது உள்நாட்டு மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்குவதற்கான முறையியல் ஒன்றுக்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதா என்பதையும்;

      (v) ஆமெனில், அந்த இணக்கப்பாடு யாது என்பதையும்;

      (vi) அதற்கமைய தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் முழுமையான புலமைப் பரிசில் வழங்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-05-23

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

உயர் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-05-23

பதில் அளித்தார்

கௌரவ கெளரவ நந்திமித்ர ஏக்கநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks