பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4465/ ’13
கெளரவ அனுர திஸாநாயக்க,— சிவில் விமானச்சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வ/ப மிஹின் லங்கா (தனியார்) கம்பனி 2010/2011 ஆம் ஆண்டில் பெற்ற தேறிய நட்டம் எவ்வளவு என்பதையும்;
(ii) அந்த ஆண்டின் கணக்குகள் தொடர்பாக கணக்காய்வை மேற்கொண்ட பட்டயக் கணக்காய்வாளர்களான ‘பிரய்ஸ் வோட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்’ நிறுவனம் மிஹின் லங்கா கம்பனியின் இருப்பு தொடர்பானதொரு கருத்தை முன்வைத்துள்ளதா என்பதையும்;
(iii) அவ்வாறாயின், அந்நிறுவனம் முன்வைத்துள்ள கருத்தில் ‘ஒரு வருடத்தில் மிஹின் லங்கா கம்பனி ரூபா 940.49 மில்லியன் நட்டத்தைக் காட்டியுள்ளதுடன், நடைமுறைப் பொறுப்புக்கள் ரூபா 1,083.92 மில்லியனால் நடைமுறைச் சொத்துக்களைத் தாண்டிச் சென்று ருபா 3,814.45 மில்லியன் எதிர் மறையான தேறிய பெறுமானத்தைக் காட்டுவதன் மூலம் கம்பனியை இயங்கும் நிலையிலான தொழில் முயற்சியொன்றாக தொடர்ந்தும் கொண்டு நடாத்துவதற்கான ஆற்றல் தொடர்பில் சந்தேகமான நிலையை காட்டுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) இந்நிலைமையில் வ/ப மிஹின் லங்கா (தனியார்) கம்பனியைத் தொடர்ந்தும் கொண்டு நடாத்துவதற்கு பொதுமக்களின் பணத்தை ஈடுபடுத்துவது பயனற்றதென்பதை அரசு ஏற்றுக்கொள்கிறதா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-08-21
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2015-02-18
பதில் அளித்தார்
கௌரவ அர்ஜுன ரணதுங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks