பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4475/ ’13
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க,— பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) மன்னார் மாவட்டத்தின் மொத்த நிலப் பரப்பிலும் கண்ணி வெடிகள் அல்லது வெடி பொருட்கள் அகற்றப்பட்டு பொது மக்கள் வாழ்வதற்குத் தேவையான சுற்றுச்சூழல் உருவாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலாளர் பிரிவின் இரணை இலுப்பைக்குளம் பிரதேசத்தின் திருமதி எம்.கே. யஸவதிக்குச் சொந்தமான சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டதன் பின்னர் கண்ணி வெடிகளை அல்லது வெடி பொருட்களை அகற்றி துப்பரவு செய்து கொடுக்கப்படவில்லை என்பதையும்;
(ii) மேற்படி காரணத்தினால் சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்கள் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள முடியாது பெரும் சிரமத்துக்கு உள்ளாவதற்கு நேரிட்டுள்ளதென்பதையும்
அவர் அறிவாரா?
(இ) ஆமெனில், மேலே குறிப்பிடப்பட்ட காணியின் உரிமையாளர்களுக்கு தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவாறு மேற்படி விவசாய நிலங்களை துப்பரவு செய்து கொடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-07-11
கேட்டவர்
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-07-11
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks