பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4621/ ’13
கௌரவ சுஜீவ சேனசிங்க,— பிரதம அமைச்சரும் புத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) லேசர் கதிர்களை பயன்படுத்தி நிலத்தின் கீழ் காணப்படும் புதைபொருட்களை அவதானிக்கக்கூடிய ஓர் இயந்திரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப் பட்டுள்ளதென்பதையும், இது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதென்பதையும் அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி இயந்திரத்தை இறக்குமதி செய்வதற்காக பாதுகாப்புத் துறையின் பலம்வாய்ந்த ஒருவரின் தலையீடு நடைபெற்றுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனின், மேற்படி நபரின் பெயர் யாதென்பதையும்;
(iii) மேற்படி பாதுகாப்புத் துறையின் பலம்வாய்ந்தவரின் தலையீட்டின் காரணமாக மேற்படி இயந்திரம் தொடர்பான விசாரணை நிறுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) மேற்படி விசாரணைகளின் தற்போதைய நிலைமை யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) மேற்படி லேசர் இயந்திரம் இறக்குமதி செய்யப்பட்ட நாடு யாதென்பதையும்;
(ii) இதற்காக செலவிடப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு என்பதையும்;
(iii) மேலே (அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள இயந்திரத்திற்கு மேலதிகமாக இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள இவ்வாறான இயந்திரங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) (i) மேலே குறிப்பிடப்பட்ட இயந்திரம் அல்லது இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுவதன் காரணமாக நிலத்தின் கீழுள்ள புதைபொருட்களின் பாதுகாப்பிற்கு ஏதேனும் நிர்ப்பந்தம் ஏற்படுமென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) ஆமெனின், அதற்கேற்ப தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-08-20
கேட்டவர்
கௌரவ சுஜீவ சேனசிங்க, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks