E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4661/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.

    1. 4661/ ’13

      கெளரவ இரான் விக்கிரமரத்ன,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     நுவரெலியாவில் கடல் மட்டத்திலிருந்து மிகவுயரமாக அமையும் விளையாட்டுத் தொகுதியின் நிர்மாணத்திற்கு கேள்விப் பத்திரம் கோரப்பட்டது எப்போதென்பதையும்;

                 (ii)    மேற்சொன்ன விளையாட்டுத்தொகுதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்ட கம்பனியின் பெயரையும்;

      (iii) மேற்சொன்ன கம்பனியை இந்நிர்மாணத்திற்காக தெரிவுசெய்தமைக்கான காரணங்களையும்

      அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

      (ஆ) (i) நுவரெலியாவில் கடல் மட்டத்திலிருந்து மிகவுயரமாக அமையும் இவ் விளையாட்டுத் தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டத்தின் மொத்தச் செலவையும்;

      (ii) இக்கருத்திட்டத்திற்கு நிதியளிப்பு செய்யவுள்ள தரப்பின் அல்லது தரப்பினரின் பெயரையும்/பெயர்களையும்;

      (iii) நிதியிடலில் ஒன்றுக்கு மேற்பட்ட தரப்பினர் ஈடுபட்டுள்ளனர் எனின், அத்தரப்பினர் நிதியளிப்பை வெவ்வேறாகவும்

      அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-06-20

கேட்டவர்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.

அமைச்சு

விளையாட்டுத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-06-20

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks