பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4736/ ’14
கௌரவ (திருமதி) அனோமா கமகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அம்பாறை மாவட்டத்தின் லாஹுகல கிராமத்திலுள்ள லாஹுகல மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) நடாத்தப்படும் வகுப்புகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) அதிபர் உள்ளடங்கலாக ஆசிரியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) லாஹுகல கிராமத்தின் சிறுவர்களுக்கு கல்வி புகட்டுவதற்காகவுள்ள ஆரம்பப் பாடசாலை யாதென்பதையும்;
(ii) அண்மையில் அப்பாடசாலை சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினை யாதென்பதையும்;
(iii) மேற்படி கிராமத்திற்கு கிழக்கு மாகாண சபையின் அனுமதியுடன் அண்மையில் ஆரம்பப் பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டதா என்பதையும்;
(iv) அப்பாடசாலையின் தற்போதைய நிலைமை யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மேற்படி பாடசாலைகள் மாகாண சபையின் கீழ் நிருவகிக்கப்பட்ட போதிலும் பொதுவாக இப்பாடசாலைகளில் சிறார்கள் தடங்கலின்றி கல்வி பயில்வதற்கான வசதிகளை வழங்குதல் மத்திய அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) ஆமெனில். மேற்படி பாடசாலைகளில் தற்போது நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-09-26
கேட்டவர்
கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks