E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4746/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.

    1. 4746/ ’14

      கௌரவ அஷோக் அபேசிங்க,— பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக நட்டம் அடைவதற்கு ஏதுவாயமைந்துள்ள விடயங்கள் யாவை என்பதையும்;

                 (ii)     சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

      (iii) மேற்படி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் வினைத்திறனை அதிகரிக்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (iv) 2011 தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரையான காலத்தில்  வருடாந்தம் இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெயின் அளவு எவ்வளவென்பதையும்;

      (v) மசகு எண்ணெய் இறக்குமதி குறைவடைந்தமையால் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதன் காரணமாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுகின்றமையை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-06-05

கேட்டவர்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.

அமைச்சு

பெற்றோலியக் கைத்தொழில்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-07-22

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks