E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4913/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பி. ஹரிசன், பா.உ.

    1. 4913/ ’14

      கௌரவ பி. ஹரிசன்,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      வட மத்திய மாகாணத்தின் போக்குவரத்து அமைச்சு மற்றும் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அனூராதபுரம் மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பயணிகள் தரிப்பிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு;

      (ii) அத்தகைய பயணிகள் தரிப்பிடமொன்றுக்காக செலவிடப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு;

      (iii) மேற்படி பயணிகள் தரிப்பிடங்களில் தற்போது பயன்படுத்தப்படும் எண்ணிக்கை எவ்வளவு

      என்பதை அவர் இச் சபையில்  அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேலே குறிப்பிடப்பட்ட பயணிகள் தரிப்பிடங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தங்களை வழங்கும் போது உரிய கேள்விப் பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா;

      (ii) இன்றேல், அந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ள அடிப்படை யாது;

      (iii) மேற்படி ஒப்பந்தங்களை வழங்கும் போது ஒப்பந்தகாரரிடமிருந்து அல்லது ஏற்புடைய கம்பனிகளிடமிருந்து பணம் பெறப்பட்டுள்ளதா

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-23

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

உள்ளூராட்சி, மாகாண சபைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-07-23

பதில் அளித்தார்

கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks