பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0132/ ’10
கெளரவ ஜானக பண்டார,— அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கண்டி மெத தும்பர வுட்சயிட் தோட்டத்தில் 810.31 ஹெக்ரயர் காணி 167,470.00 ரூபா வருடாந்த குத்தகைக்கு, கொழும்பு 03, சயிமன் ஹேவாவித்தாரண வீதியிலுள்ள மருதி தனியார் கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) இந்த குத்தகை உடன்படிக்கைக்கு அரசின் விலை மதிப்பீடும் அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளதா என்பதையும்,
(ii) மேற்படி குத்தகை உடன்படிக்கை சட்டபூர்வமானதா என்பதையும்,
(iii) குத்தகைக்காரர், குத்தகை உடன்படிக்கைக்கமைய நடந்துகொண்டுள்ளாரா என்பதையும்,
(iv) அவ்வாறில்லாவிடின் அதற்கு எதிராக கூட்டுத்தாபனம் மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) குத்தகைக்காரர் சட்டபூர்வமாக நடந்துகொண்டிருக்காவிடின், மேற்படி குத்தகை உடன்படிக்கையை இரத்துச் செய்து அந்தக் காணியை கூட்டுத்தாபனத்திற்குப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்,
(ii) இதுவரை அவ்வாறு சட்டபூர்வமாக நடந்துகொள்ளாவிடின், அதற்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்களின் பெயர்கள் யாவை என்பதையும்,
(iii) இவர்கள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை யாது என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், என்?
கேட்கப்பட்ட திகதி
2010-06-30
கேட்டவர்
கௌரவ கெளரவ ஜானக பண்டார, பா.உ.,, பா.உ.
அமைச்சு
அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks