பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4945/ ’14
கௌரவ ஆர். எம். ரஞ்ஜித் மத்தும பண்டார,— வனசீவராசிகள் வளப் பேணுகை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மொனராகலை மாவட்டத்தின், மடுள்ள பிரதேச செயலாளர் பிரிவில் அப்போதைய ஆற்றுப்படுகை அபிவிருத்திச் சபைக்கு உரித்தானதாக காணப்பட்ட “பதுளுவெல பாதுகாக்கப்பட்ட வனத்தில்” சுமார் 50 – 60 வருடங்கள் பழைமைவாய்ந்த தேக்குமரப் பயிர்ச் செய்கை காணப்படுகின்றதென்பதையும்;
(ii) குறிப்பிட்டதொரு ஆள் போலி ஆவணங்களைத் தயாரித்து மேற்படி காணியை சொந்த அறுதி உரித்துடைய காணியாக அனுபவித்து வருகின்றார் என்பதையும்;
(iii) ஒரு சில ஆட்கள் அரசாங்கத்திற்கு சொந்தமான மேற்படி தேக்கு மரப் பயிர்ச் செய்கையை அழித்து வருகின்றார்கள் என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) பல வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ள பதுளுவெல பாதுகாக்கப்பட்ட வனத்தின் தேக்குமரக் காட்டை அத்துமீறியோர்களிடமிருந்து பாதுகாப்பதற்கான துரித நடவடிக்கையை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-08-08
கேட்டவர்
கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.
அமைச்சு
வனசீவராசிகள் வளப் பேணுகை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks