பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0139/ 2010 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ துலீப் விஜேசேக்கர, பா.உ.

    1. 0139/ ’10

      கெளரவ துலீப் விஜேசேகர,— கடற்றொழில், நீரக வளமூலங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      ஐந்து வருட நன்னீர் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் உற்பத்தி இயலளவினை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்கும் முகமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட வாவிகளினதும் நீர்த்தேக்கங்களினதும் எண்ணிக்கை எத்தனையென்பதையும்,

      (ii) குறிப்பிட்ட நீர்த்தேக்கங்களுக்கு விடுவிக்கப்படவுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நன்னீர் மீன் இனங்கள் யாவையென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) விடுவிக்கப்படவுள்ள நன்னீர் மீன்களினதும், இறால்களினதும் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்,

      (ii) மேற்படி நீர்வாழ் உயிரினங்களின் பண ரீதியான பெறுமதி யாதென்பதையும்,

      (iii) குறிப்பிட்ட நீர்வாழ் உயிரினங்களை விடுவித்ததன் பின்னர், அதிலிருந்து வருடாந்தம் எதிர்பார்க்கப்படும் நன்னீர் மீன், இறால் வளங்கள் எவ்வளவு என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2010-06-30

கேட்டவர்

கௌரவ துலீப் விஜேசேக்கர, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks