E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0024/ 2015 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

    1. 24/ '15

       

      கௌரவ டலஸ் அழகப்பெரும,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தென் மாகாணத்துக்குாிய, காபட் இட்டு செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட 18 நெடுஞ்சாலைகளின் பணிகள் 2015 ஆம் ஆண்டு சனவரி மாதத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதென்பதையும்;

      (ii) கெக்கணதுரவிலிருந்து வேஹல்ல ஊடாக திக்வல்ல வரையான வீதி வாகனப் போக்குவரத்துக்கு அன்றி நடந்து செல்வதற்குக்கூட முடியாதவாறு சேதமடைந்துள்ளதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி (அ) (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்ட 18 வீதிகளும் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி (அ)(ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள வீதியில் காபட் இடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் திகதி யாதென்பதையும்;

      (iii) பொதுத் திறைசேரியினால் மேற்படி வீதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்படுமென வாக்குறுதியளிக்கப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      (iv) அதன் பிரகாரம், மேற்படி நெடுஞ்சாலைகளின் காபட் இட்டு செப்பனிடும் பணிகளுக்கு ஏற்புடையதான எதிர்கால வேலைத்திட்டம் வெவ்வேறாக யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-21

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2015-11-23

பதில் அளித்தார்

கௌரவ கருணாரத்ன பரணவிதான, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks