E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0043/ 2015 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 43/'15

       

      கௌரவ புத்திக பத்திறண,— கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்ற புரொய்லர் கோழிகளின் சுகாதார நிலைமை பற்றிய சிக்கல்கள் உள்ளதென்பதையும்;

      (ii) பண்ணை உரிமையாளர்கள் உரிய நாட்களுக்கு முன்னர் இக்கோழிகளை இறைச்சிக்காக அறுக்கின்றனர் என்பதையும்;

      (iii) இக்கோழிகள் துரிதமாக வளரும் பொருட்டு பயன்படுத்தப்படுகின்ற மருந்து வகைகளும் உணவுகளும் மனித உடலுக்கு தீங்கானது என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) இலங்கையில் இறைச்சிக்காக புரொய்லர் கோழிகள் வளர்க்கப்படுகின்ற பண்ணைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) இப்பண்ணைகளிலுள்ள கோழிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iii) 2014 ஆம் ஆண்டு கோழி இறைச்சி உற்பத்தி (கிலோகிராம்) யாதென்பதையும்;

      (iv) அதன் பிரகாரம் ஒரு நபருக்கான கோழி இறைச்சி நுகர்வு யாதென்பதையும்;

      தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) மேற்படி (அ)வில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (ii) ஆமெனில், அந்நடவடிக்கை யாதென்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-04

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2015-11-04

பதில் அளித்தார்

கௌரவ அமீர் அலி சிஹாப்தீன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks