E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0048/ 2015 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 48/ '15

       

      கௌரவ புத்திக பத்திறண,— ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) வர்த்தகர்களின் சூழ்ச்சியான மூலோபாயங்கள் காரணமாக கறுவா கைத்தொழில் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுகின்றதென்பதையும்;

      (ii) தரத்தில் குறைந்த கறுவா உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதென்பதையும்;

      (iii) மேற்படி நிலைமை இலங்கையின் நற்பெயருக்கு பெரும் பாதகமாகும் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) 2014 ஆம் ஆண்டில் ஏற்றுமதியின் பின்னர் தரத்தில் குறைவாயுள்ளமையால் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட கறுவா உற்பத்திகள் யாவை என்பதையும்;

      (ii) அவற்றின் அளவு மற்றும் பெறுமதி தனித்தனியே யாதென்பதையும்;

      (iii) மேற்படி உற்பத்திகளை ஏற்றுமதி செய்தவர் யாரென்பதையும்;

      (iv) மேற்படி நபரின் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) (i) ஏற்றுமதி செய்யப்படும் கறுவா உற்பத்திகளின் தரத்தை பரிசோதிப்பதற்கு தற்போது எடுக்கப்படும் வழிமுறைகள் யாவை என்பதையும்;

      (ii) தரமற்ற கறுவா ஏற்றுமதியை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-06

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2015-11-06

பதில் அளித்தார்

கௌரவ தயா கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks