E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0070/ 2015 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 70/ '15

      ​கௌரவ புத்திக பத்திறண,— கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மாடுகளுக்கு ஏற்படும் மாட்டுக்குரை மற்றும் கோமாரி நோய் மிகத் தீவிரமாக இலங்கை பூராகவும் பரவிச் செல்கின்றதென்பதையும்;

      (ii) கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தில் மேற்படி நோயை தடுப்பதற்கு வழங்கப்படும் தடுப்பூசி போதியளவில் இல்லையென்பதையும்;

      (iii) மேற்படி நோயை கட்டுப்படுத்துதல் தொடர்பாக குறிப்பிட்ட திணைக்களத்தினால் வௌியிடப்பட்ட சுற்றறிக்கையின் பல விடயங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதென்பதையும்;

      (iv) அவ்வாறு செய்ததன் காரணமாக மேற்படி நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலிருந்து அகற்றப்பட்ட விடயங்கள் யாவையென்பதையும்;

      (ii) மேற்படி விடயங்கள் அகற்றப்பட்டமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      (iii) மீண்டும் மேற்படி விடயங்களை உள்ளடக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (iv) மாடுகளுக்கு ஏற்படும் மாட்டுக்குறை மற்றும் கோமாரி நோயை கட்டுப்படுத்தத் தேவையான ஔடதங்களை பற்றாக்குறையின்றி பெற்றுக்கொடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

      (v) மேற்படி நோயினால் அழிவடையும் கால்நடை வளத்தை இனப்பெருக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் துரித நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-28

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-02-09

பதில் அளித்தார்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks