பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
73/ '15
கெளரவ புத்திக பத்திறண,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2014.05.25 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு சற்று தொலைவிலுள்ள கடலில் அமைந்துள்ள மசகு எண்ணெய் அனுப்பும் குழாய் பழுதடைந்ததனால் மசகு எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு தாமதக் கட்டணம் செலுத்த நேரிட்ட கப்பல்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) அந்த ஒவ்வொரு கப்பலுக்கும் செலுத்திய பணம் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iii) குழாயைத் திருத்துவதற்கு எத்தனை நாட்கள் எடுத்தன என்பதையும்;
(iv) இக் காரணத்தினால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை முழுமையாக மூடிவிடுவதற்கு நேரிட்ட நாட்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(v) எரிபொருள் அனுப்பும் குழாய்க்கு ஏற்பட்ட இந்த சேதத்தினால் இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு ஏற்பட்ட மொத்த நட்டம் எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மிதவைக்குத் தேவையான குழாய்களை கொள்வனவு செய்வதற்காக இறுதியாக கேள்விப் பத்திரம் கோரப்பட்ட திகதி யாதென்பதையும்;
(ii) அவ்வாறெனின், கேள்விப் பத்திரங்களை சமர்ப்பித்த கம்பனிகள் மற்றும் அந்த கம்பனிகள் உரித்தாகும் நாடுகள் யாவை என்பதையும்;
(iii) கேள்விப் பத்திரம் வழங்கப்பட்ட கம்பனி யாதென்பதையும்;
(iv) அந்தக் கம்பனிக்கு கேள்விப் பத்திரம் வழங்கப்பட்டமைக்கான காரணம் யாதென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-30
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-02-11
பதில் அளித்தார்
கௌரவ அனோமா கமகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks