E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0086/ 2015 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

    1. 86/ '15

       

      கௌரவ டலஸ் அழகப்பெரும,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தேயிலைக் கொழுந்தின் விலை துரிதமாக வீழ்ச்சி அடைந்துள்ள காரணத்தால் இலங்கையின் தேயிலைக் கைத்தொழில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதோடு குறிப்பாக, சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளார்கள் என்பதையும்;

      (ii) தற்போது ஒரு கிலோ பச்சைக் கொழுந்துக்கென செலுத்தும் விலை ரூபா 54/- வரை வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதையும்;

      (iii) ஒரு கிலோ பச்சைக் கொழுந்துக்கென செலுத்தும் விலை ரூபா 50/- ஆகக் குறைவடையுமாயின் இலங்கையின் சகல தேயிலை தொழிற்சாலைகளும் மூடப்படும் அபாயம் உள்ளது என்பதையும்;

      (iv) கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேயிலைக் கொழுந்துக்கென ரூபா 80/- உத்தரவாத விலை வழங்கப்படுமென குறிப்பிட்டுள்ளபோதிலும் தற்போது அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) இந்த நெருக்கடி நிலை காரணமாக கடந்த மாதத்தில் மூடப்பட்டுள்ள தேயிலை தொழிற்சாலைகள் தொடர்பான அறிக்கையொன்றை அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?

      (இ) (i) தேயிலைக் கைத்தொழில் இவ்வாறு ஆபத்தை நோக்கிச் செல்வதில் தாக்கம் செலுத்திய மற்றும் இப்போது கூட தாக்கம் செலுத்துகின்ற ஏதுக்கள் யாவை என்பதையும்;

      (ii) தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் அது சார்ந்த தொழில்களை மேற்கொள்ளும் மில்லியன் கணக்கான மக்களைக் காப்பாற்ற கடைப்பிடிக்க எதிர்பார்த்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-03

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2015-11-03

பதில் அளித்தார்

கௌரவ லக்ஷமன் வசந்த பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks